Saturday, October 9, 2010

மாறிவரும் மலாவி நம் தமிழ் தேசம்


மலாவி என்றொரு அழகிய தேசம், ஆப்ரிக்காவில் உள்ள குட்டி தேசம் நான் அங்கு சென்றதில்ல அனால் சாரு நிவேதிதா அவர்களின் "மலாவி என்றொரு தேசம்" படித்திருக்கிறேன்.
அங்கு இந்தியரின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகம்.அங்கு பிழைக்க போன நம் தேசத்தவர் மலாவியரை ஆள்கின்றனர்.மலாவியர் சற்று! அல்ல நல்ல மூடர்களே.

நம் தேசத்தவர் சட்டைக்கு போடும் பட்டனை ஒரு பெட்டி நெறைய கொண்டு போய் பணக்காரர் ஆனவரே அதிகம்.அப்போ எப்டி பட்ட தேசம்நு பாத்துகோங்க.அனாலும் இயற்கை வளம் மிக்க தேசம் .ஊழல் சொல்லவே வேண்டாம் ,இயற்கை வளத்திலும் தட்ப வெப்பத்திலும் சரி நம்மையே ஒத்துபோகும் தேசம்.சரி நம்ம விசயத்துக்கு வருவோம் .
அங்கு படிப்பு என்பது எட்டா கனி ,விலைவாசி சொல்லவே வேண்டாம் ,மருத்துவம் என்னத்த சொல்றது மருத்துவத்திற்கு உதாரணம் சொல்லனும்ன அங்க சாதாரண காய்ச்சல் வந்து இறந்தவர் அதிகம்.
இறப்பு அங்கு சாதாரணம் ,அதே போலதான் இங்கயும் இப்போதைய நிலை இங்கு மருத்துவமும் கல்வியுமே நல்ல தொழில்துறை ,இப்டி இருக்கும் போது நல்ல கல்வியும் நல்ல மருத்துவமும் இங்கு யாருக்கு கிடைக்கும் பணம் படைத்தவனுக்கு மட்டுமா எங்க! பணத்துக்காக அவனையுமே சவடிசுடுரங்க இத எங்க போய் சொல்றது.
சரி விடுங்க நாம அன்றாட வாழ்கைக்கு வருவோம் .சென்னைல ஆட்டோல ஏறி இறங்கின மினிமம் நாற்பது ரூபா இதுவே நம்ம பக்கத்துக்கு மாநிலமான கர்நாடகால பதினேழு ரூபா இத எங்க போய் சொல்றது ,சரி மீட்டர் போடுங்கன்னு சொன்ன போய் வேற ஆட்டோவ பாரு,இதுல இன்னும் கொஞ்சம் அதிகமா அவனோட வசவுவேற வாங்கணும் என்ன கொடுமை இது.
இதுபோல சொல்லிட்டே போவலாம் இது போல உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே சொல்லுங்க அதுபோல அதை சரிசெய்வதுக்கான வழியையும் சொல்லுங்க

Tuesday, June 8, 2010

படித்ததில் புடித்தது


பசி தான் மிக பெரும் மிருகம்
அதை
அடக்கிட வழிகள் இங்கு இல்லை ஆ?
கண்ணீர் துளி இன் ஆலம்,
அது கடலை விடவும் மிக அதிகம்,
இது மாறுமா?

கண்ணும், காதும், கையும், காலும், இல்லா மனிதர் உண்டு,
வாயும், வாயுரும் இல்லா மனிதர் எங்கும் இல்லை.

அகிலம் எங்கும் அன்பின் விதை,
அள்ளி துவ ஆட்கள் வேண்டும்,
வரும் காலத்தில் வறுமை இல்லா உலகம் வேண்டும் வேண்டும்
-
Arun

Wednesday, April 28, 2010

சிகரெட்


வடிவம் இல்லா நீ என் நண்பனின் அறிமுகம்
என்னை நீ மயக்கினாய்
நானும் மயங்கினேன்
நனிக்கொருமுறை நினைக்கிறன்
உன்னை புகைகிறேன்
நீ எரிந்து என்னையும் எரிக்கிறாய்!

Monday, April 26, 2010

திராவிடன்


என் வீட்டு ரோஜா மே மாதம் பூபதில்லை
அவள் என் வீட்டருகே வருவதினால்...
அவளே நிரந்தரமாக வருவாள் ஆனால்
மே மாதம்..!
ரோஜா...!
அனைத்தும் தேவை இல்லை
என்னவள் போதும்....

நான் எப்படி புரிய வைப்பேன்
அவளுக்காக விழித்திருந்த விழிகளிடம்
அவளையே நினைத்திருந்த இதையதிடம்
உன்னை வேண்டாம்
என்றும்
என்னை மறந்தால் என்றும்